திரைப்படமாகும் நடிகை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு; கலக்கத்தில் திரை பிரபலங்கள்
திரைப்படமாகும் நடிகை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு; கலக்கத்தில் திரை பிரபலங்கள்
சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைஉலகையே கலங்கடித்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீரெட்டி. அவரது பட்டியலில் அடுத்து யாருடைய பெயர் வருமென்ற அச்சத்தில் அணைத்து நடிகர்களும் இயக்குனர்களும் இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் அவருடைய வாழ்க்கையின் வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருபதை கேட்டு இன்னும் அச்சம் கூடியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புகளுக்காக நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக குற்றசாட்டி, அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தற்போது தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறி அதிர்ச்சியை கிளப்பினார். இதனையடுத்து சமீபத்தில் லாரன்ஸ் ஸ்ரீரெட்டிக்கு சாவால் விடும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அதோடு நிறுத்தாமல், சென்னையில் தங்கி இருக்கும் அவர் இயக்குனர் சுந்தர்.சி, நடிகர் ஆதி ஆகியோர் மீதும் புகார்களை கூறி இருக்கிறார். இதற்கிடையே கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடிகை ஸ்ரீரெட்டி மீது, இயக்குனரும் தயாரிப்பாளருமான ''வாராகி'' சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதனையடுத்து, கடந்த ஜூலை 27 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், இயக்குனரும் தயாரிப்பாளருமான ''வாராகி'' மீது ஸ்ரீரெட்டி அளித்த புகாரில் ''இயக்குனர் வாராகி என்னை விலை மாது என்று கூறியுள்ளார். இதனால் அவர் மீது பெண் வண்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும்.'' என தெரிவித்துள்ளார். மேலும், தன்னை வீடு வரை மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி தன்னுடைய வாழ்க்கையில், அவருக்கு நடந்த சம்பவங்களை திரைப்படமாக எடுக்க இருக்கிறார். இந்த படத்தை 'தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன்', 'ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன்' ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ளது.
அலாவுதீன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். நடிகை ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெற உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால், அத்தனை பேரின் பட்டியலும் திரையில் வந்துவிடும் என்பதால், திரையுலகத்தில் பலர் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.