மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகைக்கு சிறைத்தண்டனை! வெளியான தகவலால் பரபரப்பில் திரையுலகம்!
Hollywood actress got jail punishment
ஹாலிவுட் சினிமாவில் தி நியூயார்க் கிட்ஸ், சக்கர்ஸ், கிரிட்டிக்கல் மாச், பேக் டூ த பீச், சீக்ரெட் அட்மைரர், கிராள்ஸ்பேஸ் உள்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் லோரி லாஹ்லின். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், மொஸிமோ கியானுள்ளி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இஸபெல்லா ரோஸ், ஓலிவியா ஜேட் என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவில் கல்லூரி நுழைவு தேர்வு ஒன்றில், தங்களது பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக 50 பேர் போலி சான்றிதழ்களை சமர்பித்ததாக தகவல்கள் பரவியது. இதன் விசாரணையில் நடிகை லோரி லாஹ்லினும் அவரது கணவரும் தங்களது மகளை போலி சான்றிதழ் மூலம் கல்லூரியில் சேர்த்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இது உறுதிசெய்யப்பட்ட நிலையில் லோரி லாஹ்லினுக்கு 2 மாத சிறை தண்டனையும், அவரது கணவருக்கு 5 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியே 74 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.