×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய்யுடன் நண்பர் ஆனது எப்படி? விஜய்யின் நண்பர் சஞ்சீவ் அசத்தல் பதில்!

How we are became friends with vijay actor sanjeev

Advertisement

தமிழ் சினிமாவின் தளபதி விஜய். தளபதி ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம் என இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நாளைய தீர்ப்பு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தளபதி இன்று சர்க்கார் அமைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

தற்போது அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள தளபதி தனது அடுத்த படத்தில் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் தளபதிக்கு ரசிகர்கள் எவ்வளவு அதிகமோ, அதே அளவிற்கு நண்பர்களும் ஏராளம்.

விஜய்யின் நண்பர்களில் ஒருவர் பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ். இவர் தளபதியுடன் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். விஜய், சஞ்சீவ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் இவர்கள் இருவரும் எப்படி நண்பர்கள் ஆனார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சஞ்சீவ் நாங்கள் நபர்கள் ஆனது எப்படி என்று கூறியுள்ளார். விஜய் படித்தது சென்னை லொயோலா கல்லூரி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கல்லூரியில் நடந்த ஒரு நுழைவு தேர்வில் விஜய், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் கலந்துள்ளனர்.

தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தவித்துள்ளார் தளபதி. அந்தசமயம் தனக்கு பின்னல் அமர்ந்திருந்த சஞ்சீவிடம் பதில் கேட்டுள்ளார், அவரும் தெய்யவில்லை என்று கூற, தனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஸ்ரீநாத்திடம் கேட்டுள்ளார். பின்னர் தேர்வு முடிந்து வெளியே வந்ததும் மூன்று பேறும் பேசி நண்பர்களாக மாறினோம். அதில் இருந்து 25 வருடங்களாக எங்கள் நட்பு தொடர்கிறது என்று சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #sanjeev #Loyola college
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story