சர்ப்ரைஸ் என மனைவியை படுக்கவைத்து கணவன் செய்த மோசமான காரியம்.! எதிர்பார்ப்போடு காத்திருந்த மனைவிக்கு பேரதிர்ச்சி!!
husband try to kill wife in britania
பிரித்தானியா ராயல் தன்பிரிட்ஜ் வெல் பகுதியை சேர்ந்தவர் ஷான் மே. இவரது மனைவி லவுரா. இவர்கள் இருவரும் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய ஷான் தனது மனைவி லவுராவுடன் அன்பாக பேசியுள்ளார். பின்னர் இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக உறவு கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஷான் தனது மனைவியை படுக்கையில் படுக்கச் கூறி, கண்களை இறுக்க மூடிக் கொள்ள கூறியுள்ளார். பின்னர் எண்களை எண்ண துவங்கியுள்ளார். இந்நிலையில் தனது கணவர் தனக்கு ஏதோ இன்ப அதிர்ச்சி கொடுக்கபோவதாக லவுரா மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், ஷான் வேகமாக கத்தி ஒன்றை எடுத்து தனது மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதனை சிறிதும் எதிர்பார்க்காத லவுரா பெரும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் குத்தும்பொழுது கத்தியின் கைப்பிடி உடைந்த நிலையில் கத்தி லவுராவின் கழுத்தில் ஆழமாக இறங்கவில்லை. பிறகு ஷானேதனது மனைவியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று அனுமதித்தார். அங்கு மருத்துவர்கள் அவர்க்கு சிகிச்சை அளித்த போது எவ்வாறு காயம் ஏற்பட்டது என கேட்டுள்ளனர். அதற்கு லவுரா தான் தன்னைத்தானே குத்தி கொண்டதாக கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஷான்தான் தனது மனைவியை கத்தியால் குத்தினார் என்பது தெரியவந்தது மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், தனது சொத்து முழுவதும் அடமானத்தில் வந்துவிட்டது. மேலும் ஏராளமான கடனும் உள்ளது. இந்நிலையில் நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் இந்நிலையில் என்னையே நான் கத்தியால் குத்திக் கொள்ள எண்ணிய நிலையில் தவறுதலாக லவுராவை குத்திவிட்டேன் என கூறி தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வழக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.