ஏழு கோடியில் கிடைக்காத மகிழ்ச்சி, ஏழு ரூபாயில் கிடைத்தது! தமிழ் சினிமா பிரபலம்!
I am not happy when i am earning 7 crores
சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய இசை அமைப்பாளர் இளையராஜா தனது கடந்த கால வாழ்கை பற்றி பேசினார்.
எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை, ஆனால், ஜோசியர் எனக்கு 8-ம் வகுப்பு மேல் படிப்பு வராது என கூறிவிட்டார். நான் மேலும் படித்து ஜோசியர் கூறியது பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று ஆசை பட்டேன். ஆனால், எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு சேர கல்வி கட்டணம் ரூ.25 எனது அம்மாவிடம் இல்லை. வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து படிக்க, எனது அம்மா ஒப்புக்கொண்டார்.
அந்த சமயம் வைகை அணை கட்டிட வேலை நடைபெற்றது. அதில் பைப் மூலம் தண்ணீரை பாய்க்கும் வேலையில் உற்சாத்துடன் சேர்ந்தேன். தண்ணீரோடு சேர்ந்த எனது பாடல் சத்தத்துடன் வைகை அணையின் கட்டுமான பணி நடைபெற்றது.
கட்டுமான பணியை மேற்பார்வையிட பொறியாளர் எஸ்.கே.நாயர் அவ்வப்போது அங்கு வருவார், ஆனால் நான் எதையும் கவனிக்காமல் பாடிக்கொண்டே எனது வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த அவர் என்ன படித்துள்ளாய் என்று கேட்டார். எட்டாம் வகுப்பு என்றேன்.
அவர் அலுவலக சிப்பாந்தியாக பணியில் சேர்த்த அழைத்து சென்றுவிட்டார். அங்கு பாட முடியாத என்ற ஒரே வருத்தம் மட்டுமே மிஞ்சியிருந்தது. வேலைக்கு சேர்ந்து நான் சம்பாதித்த முதல் மாத சம்பளம் ஏழு ரூபாய் புத்தம் புதிய நோட்டை கையில் வாங்கியதும் ஏற்பட்ட மனகிளர்ச்சியுடனான உள்ளார்ந்த மகிழ்ச்சியில் வானளாவி பறந்த மனது, ஏழு கோடி ரூபாய் சம்பாதித்தபோது அந்த சந்தோஷ அனுபவம் கிடைக்கவில்லை. எனவே, சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை, அவரவரின் மனதில் தான் உள்ளது"