"கௌதம் மேனன் திரைப்படத்தால் வருத்தம் அடைந்தேன்" - நடிகை ரித்து வர்மா பேட்டி.!
கௌதம் மேனன் திரைப்படத்தால் வருத்தம் அடைந்தேன் - நடிகை ரித்து வர்மா பேட்டி.!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் தயாரித்து இயக்கிய திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம் சிம்ரன் ஐஸ்வர்யா ராஜேஷ் கிருஷ்ணா வம்சி பார்த்திபன் ராதிகா சரத்குமார் மற்றும் ரித்து வர்மா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்தத் திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் இந்தப் படத்தின் வெளியீடு தடை செய்யப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.