தற்கொலை வரை சென்ற இசை அமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா..! அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
I was planned to commit suicide says yuvan shankar raja
ஒரு சமயத்தில் தற்கொலை செய்துகொள்ளலாம் என எண்ணியதாக தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னனி இசை அமைப்பாளர்களில் ஒருவர் யுவன்சங்கர்ராஜா . இவரது திருமண வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு சில வருடங்களுக்கு முன் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதற்காக தானும் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் யுவன்சங்கர்ராஜா.
யுவன்சங்கர்ராஜாவின் இஸ்லாம் மத மாற்றம் குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய பதிவுகள் கடந்த சில வாரங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளிவந்தது. அதற்கு அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா விரிவான பதிலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், யுவன்சங்கர்ராஜா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பலவிதமான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய பயம் என்ன? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு யுவன் கூறிய பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக பலமுறை தனக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றியதாகவும், ஆனால் அவற்றையெல்லாம் கடந்து இன்று அமைதியான வாழ்க்கை வாழ எனக்கு இஸ்லாம் மதம் பெரிதும் உதவியதாக யுவன் கூறியுள்ளார்.