விஜய்னா ஆக்சன் படம், அஜித்துனா காமெடி படம்! பிரபல இயக்குனர் கூறிய பதிலால் கடுப்பான தல ரசிகர்கள்!
I will direct comedy movie with ajith director karthik supuraj
பீட்ஸா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். பீட்ஸா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவாறாக மாறினார் கார்த்திக் சுப்புராஜ். பீட்ஸா படத்தை தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். அதன்பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இறைவி என்ற படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கம் வாய்ப்பு பேட்ட திரைப்படம் மூலம் அவருக்கு கிடைத்தது. பேட்ட படமும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; நீங்கள் தமிழ் சினிமாவில் ரஜினியை வைத்து படம் பண்ணிய நீங்கள், தல தளபதியை வைத்து படம் இயக்கினால் என்ன மாதிரியான படத்தை இயக்குவீர்கள்? என கேட்டதற்கு நிச்சயம் விஜய்க்கு கேங்க்ஸ்டர் மாதிரியான படம் தான் பண்ணுவேன் என்றார்.
அப்போ அஜித்துக்கு என்ற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் அளித்த படத்தில் அஜித் ரசிகர்களிடையே கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித்துக்கு காமெடி படம் தான் என கூலாக பதிலளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். பொங்கலுக்கு வெளியான பேட்ட ட்ரைலருக்கு பதிலடிகொடுக்கும் விதமாக விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் அமைந்ததனால்தான் கார்த்திக் சுப்புராஜ் இவ்வாறு கூறுவதாக அஜித் ரசிகர்கள் பயங்கர கோபத்தில் உள்ளனர்.