கணவரை ஏமாற்றி, கள்ளகாதலனுடன் உல்லாசம்! கையில் பச்சை குத்தியிருந்த அந்த பெயரால் துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்!
illegal lover dead girl for her third love
நாமக்கல் மாவட்டம் ராமபுதூர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த திருமங்கை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கை கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பதறிப்போன அவரது கணவர் திருமங்கையை ஊர் முழுவதும் தேடியுள்ளார்.
இந்நிலையில் அவர் வெள்ளக்கோவில் அருகே அமராவதி ஆற்றின் கரையோரம் உள்ள புதர் ஒன்றில் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருமங்கைக்கு திருமணத்திற்கு முன்பே தனபால் என்பவருடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து தனபாலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் கூறியதாவது, திருமங்கை மற்றும் தனபால் இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் வயதை காரணம் காட்டி திருமங்கை அவரை விட்டுவிட்டு ரமேசை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவர் தனபாலுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி கணவரிடம் பொய் கூறிவிட்டு தனபாலுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இவ்வாறு சம்பவத்தன்று அவர் தனபாலுடன் தனிமையில் இருந்த நிலையில் அவரது கையில் ஆடம்ஸ் என்று பெயர் பச்சை குத்தப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு கோபமடைந்த தனபால் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு திருமங்கை இது தனது கணவரின் இன்னொரு பெயர் என கூறியுள்ளார்.
இருப்பினும் அதனை தனபால் நம்பாத நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்னர் ஆத்திரமடைந்த தனபால் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து திருமங்கையை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து போலீசார் தனபாலை கைது செய்தனர்.