நடிக்க அழைத்து மாடல் அழகியை பலாத்காரம் செய்த இளைஞன்; 23 வயது இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்.!
நடிக்க அழைத்து மாடல் அழகியை பலாத்காரம் செய்த இளைஞன்; 23 வயது இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதியை சேர்ந்த 23 வயது மாடல் அழகியை, ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லாவை சேர்ந்த இளைஞர் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
பெண்ணும் அதனை நம்பி சிம்லா சென்ற நிலையில், டிசம்பர் 22ம் தேதி படப்பிடிப்பு என்று கூறி, ஹோட்டல் அறைக்குள் வைத்து மாடல் அழகி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதனை இளைஞர் விடியோவும் பதிவு செய்து வைத்துக்கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி சிம்லாவில் உள்ள மஹிளா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.