The Sabarmati Report: தி சபர்மதி ரிப்போர்ட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.!
The Sabarmati Report: தி சபர்மதி ரிப்போர்ட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.!
அவினாஷ் அர்ஜுன் எழுத்தில், ரஞ்சன் இயக்கத்தில், பாலாஜி மோகன் பிக்சர்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி சபர்மதி ரிப்போர்ட் (The Sabarmathi Report). குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு இரயில் எரிக்கப்பட்டது தொடர்பான கதையம்சத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
பல சர்ச்சைகளுக்கு பின் வெளியானது
நடிகர்கள் விக்ராந்த், ராசி கண்ணா, ரீதி தோக்ரா, பர்கா சிங் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக வெளியாகியுள்ள இப்படம், பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் 15 நவம்பர் 2024 அன்று, பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என சர்ச்சைகளில் சூழ்ந்து வருகிறது.
இதையும் படிங்க: #Breaking: கஞ்சா கும்பலுடன் தொடர்பு? நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் விசாரணை.!
பிரதமருடன் நேரில் சந்திப்பு
இந்நிலையில், திரைபடக்குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் படக்குழு அரசியல் தலைவர்களை சந்தித்துள்ளது, படத்துக்கான ஆதரவை பெற்று வந்த நிலையில், தற்போது பிரதமரையும் நேரில் சந்தித்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று படத்தை பார்த்த நிலையில், இன்று படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: பாட்டில் ராதா படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!