கொரோனாவால் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு! மீண்டும் எப்பொழுது நடைபெறவுள்ளது தெரியுமா?
International flim festival of india date postponed for corono
கடந்த 1952ம் ஆண்டு முதல் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த விழா மும்பை, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவிவரும் நிலையில், இந்த விழா நடைபெறுமா? என பெரும் கேள்விகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் கோவாவில் நடைபெறவிருந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா கொரொனோ அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்,
வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.