பெற்ற தாயின் இறுதிச்சடங்கை கண்ணீருடன் வீடியோகாலில் பார்த்த பிரபல நடிகர்.! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்.!
Irrfan Khans mother dies in Jaipur actor unable to attend her funereal
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், விமான போக்குவரத்துக்கு உட்பட அணைத்து விதமான போக்குவரத்துக்கும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் முக்கியமான நிகல்வுகளுக்கு கூட போக முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இறந்து போன தனது தாயின் இறுதி சடங்கை பிரபல பாலிவுட் நடிகர் இப்ரான் கான் வீடியோ கால் மூலம் பார்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹிந்தி நடிகரான இப்ரான் கான் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கான சிகிச்சை முடிந்தபிறகு மீண்டும் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். சமீபத்தில் இவர் நடித்த ஆங்க்ரேஸி மீடியம் என்ற படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தபோது ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.
தற்போது லண்டனில் இருக்கும் இப்ரான் கான்ஊரடங்கு காரணமாக லண்டனில் சிக்கியிருக்கும் நிலையில், அவரது தாய் சயீதா பேகம் கடந்த சில மாதமாக உடல் நிலை சரி இல்லாமல் இருந்த நிலையில் காலமானார். தன் தாய்க்கு இறுதி சடங்கு செய்வதை நேரில் காண முடியாமல் வீடியோ மூலம் பார்த்துள்ளார் இர்பான். இதனால் பலரும் தங்கள் வருத்தத்தையும், இறங்கல்களையும் அவருக்கு தெரிவித்துள்ளனர்.