'லியோ' திரைப்படம் 'LCU'-வில் வருகிறதா? - கல்லூரி விழாவில் லோகேஷ் கொடுத்த அப்டேட்!
'லியோ' திரைப்படம் 'LCU'-வில் வருகிறதா? - கல்லூரி விழாவில் லோகேஷ் கொடுத்த அப்டேட்!
தமிழ் சினிமாவில் வெற்றியுணர்களின் முன்னணியில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் கைதி,மாஸ்டர்,விக்ரம் என நான்கு மிகப்பெரிய வெற்றிப்படங்களின் மூலம் தமிழ் சினிமா இயக்குனர்களில் முதன்மையானவராக இருந்து வருகிறார். தற்போது தளபதி விஜய் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார்.
இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சலில் வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படம் எல்சியு வில் வருமா என தெரிந்து கொள்வதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது என தெரிவித்தார். அவர் லியோ என்ற பெயரை கூறியதுமே அரங்கமே அதிர்ந்தது. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தகவல்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சினிமாவில் அனைத்து நடிகர்களையும் வைத்து படம் இயக்க ஆசை இருக்கிறது என தெரிவித்த அவர் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை வைத்து படம் இயக்குவேன் என கூறினார். சினிமாவில் நிறைய நடிகர்களுடன் பணியாற்றினாலும் அண்ணா என்று கூப்பிட வைத்தவர் விஜய் தான் என தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தான் தனது ரோல் மாடல் என பகிர்ந்து கொண்டார் லோகேஷ் கனகராஜ்.