சூர்யாவுடன் நடிக்க மறுப்பு தெரிவித்தாரா சாக்லேட் பாய்.? விபரங்கள் இதோ.!
சூர்யாவுடன் நடிக்க மறுப்பு தெரிவித்தாரா சாக்லேட் பாய்.? விபரங்கள் இதோ.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவார் என்ற வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்த வருடம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சூரரைப் போற்று புகழ் இயக்குனரான சுதா கொங்காராவுடன் இணைகிறார் சூர்யா. இந்தக் கூட்டணியின் முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்த புதிய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.