இனி அதுக்கு வாய்ப்பே இல்லையா?? திடீரென ஐஸ்வர்யா செய்த அதிரடி காரியம்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
இனி அதுக்கு வாய்ப்பே இல்லை.! திடீரென ஐஸ்வர்யா செய்த அதிரடி காரியம்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அண்மையில் அறிவித்தனர்.
இது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் தனுஷ் ஐஸ்வர்யா இயக்கிய 'பயணி' ஆல்பம் பாடலைப் பகிர்ந்து, 'தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்' என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஐஸ்வர்யாவும் 'நன்றி தனுஷ்' என பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் இது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்வதற்கான அறிகுறி என பலரும் கூறி வந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இதுவரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷின் பெயரை இணைத்திருந்த ஐஸ்வர்யா அதனை நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமிலும் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரசிகர்கள் இனி ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் சேர வாய்ப்பே இல்லை என கூறி வருகின்றனர்.