வெள்ளை நிற உடையில் தேவதையாக ஜொலிக்கும் லவ் டுடே பட நடிகை இவானா..
வெள்ளை நிற உடையில் தேவதையாக ஜொலிக்கும் லவ் டுடே பட நடிகை இவானா..
தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் இவானா. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். முதன் முதலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவானா தற்போது தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலமாகவே இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார்.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் இவானாவின் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பல கவர்ச்சியான புகைப்படங்களை பதிந்து வருவார். தற்போது வெள்ளை நிற உடையில் தேவதையாக ஜொலிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.