இணையத்தில் வைரலாகும் ஜாக்கிசானின் வயதான புகைப்படம்.. அவரே கொடுத்த விளக்கம்!
இணையத்தில் வைரலாகும் ஜாக்கிசானின் வயதான புகைப்படம்.. அவரே கொடுத்த விளக்கம்!
உலகளவில் தன்னுடைய ஆக்சன் படங்களை மூலம் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் ஜாக்கி சான். ஆனால் சமீப காலமாக அவர் திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொள்ள கொண்டு வருகிறார். வான்கார்ட் திரைப்படம் தான் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் அவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகியது. அந்த புகைப்படத்தில் ஜாக்கி சான் மிகவும் வயதாகி, உடல் நலிவுற்றவர் போல தோன்றியிருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஜாக்கிசானுக்கு என்ன ஆனது என்று அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜாக்கி சான், அந்த புகைப்படம் என்னுடைய அடுத்த படத்துக்கான கெட்டப். நான் நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.