ஒரே பிரச்சினை! நடிகர் அஜித்தை தொடர்ந்து ஜாக்கிசான் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! ஷாக்கான ரசிகர்கள்!
Jackie chan notice about cheating people who used his name
உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்களுள் ஒருவர் ஜாக்கிசான்.இவர் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் ஆக்ஷன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவருக்கென தனி ரசிகர்பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நடிகர் ஜாக்கிசானின் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜாக்கிசானின் ஜேசி குரூப் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பெயரையும், ஜாக்கிசானின் பெயரையும் பயன்படுத்தி சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு உங்களிடம் வருபவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். அவ்வாறு யாரேனும் வந்து உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.
மேலும் எங்களது நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்சினை நடிகர் அஜித்துக்கும் கடந்த சில காலங்களுக்கு முன்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக நடிகர் அஜித்தும் தனது வக்கீல் மூலம் அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.