படப்பிடிப்பில் பயங்கர விபத்து! நீருக்கடியில் மாயமான ஜாக்கி சான்! பதறிப்போன படக்குழு! வெளியான அதிர்ச்சி சம்பவம்!
jackie chan struggled in water while shooting
ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி சான் நடிப்பில் ஆங்கிலத்தில் உருவாகி வரும் படம் வேன்கார்ட். இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா அச்சுறுத்தலால் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஜாக்கி சான் மற்றும் நடிகை மியா முகி இருவரும் காட்டாற்றில் ஜெட்- ஸ்கி வாகனத்தில் பயணிப்பது போன்ற சாகச காட்சி படமாக்கப்பட்டது. அப்பொழுது எதிர்பாராத விதமாக வாகனம் சிறிய பாறையில் மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
அதில் ஜாக்கி சானும் மியாவும் தண்ணீரில் மூழ்கினர். அதனை தொடர்ந்து விழுந்த சில நொடிகளில் மியா முகி தண்ணீரிலிருந்து வெளியே வந்தார். ஆனால், ஜாக்கி சானை எங்கும் காணவில்லை. அதனைத் தொடர்ந்து பதறிப்போன பாதுகாவலர்கள் தண்ணீரில் குதித்து ஜாக்கிசானை தேடிய நிலையில் 45 வினாடிகளுக்கு பிறகு பாறையின் அடியில் சிக்கிக்கொண்ட அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இந்த காட்சிகள் அனைத்தும் தற்செயலாக ஓடிக் கொண்டு இருந்த கேமராவில் படமானது.விபத்தினை அடுத்து படப்பிடிப்பினை தள்ளி வைக்க தயாரிப்பாளர்கள் கேட்ட போதிலும், சிறிது ஓய்வுக்கு பின் ஜாக்கி ஜான் மீண்டும் அதே காட்சியில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.