விரைவில் வெளியாகிறது ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்; அசத்தல் தகவலை வெளியிட்ட படக்குழு.!
விரைவில் வெளியாகிறது ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்; அசத்தல் தகவலை வெளியிட்ட படக்குழு.!
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் திரைப்படங்களை இயக்கி வழங்கிய நெல்சன் திலீப் குமார், தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.
முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். அதிரடி சண்டை படமான ஜெயிலர் விறுவிறுப்புடன் தயாராகி வருகிறது. அனிருத் இசையமைத்துவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்து விட்டது.
இந்த நிலையில், தற்போது முதல் பாடல் விரைவாக வெளியாக உள்ளது. இதற்காக ட்விட்டரில் நேற்று இயக்குனர் இசையமைப்பாளரிடம் அப்டேட் மற்றும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கள் கேட்டு இருந்தார்.
இதுகுறித்த டேக்கும் ட்ரெண்டாகி வந்தது. அனிரூத் கொஞ்சம் அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் வைத்துள்ளார்.