அடேங்கப்பா! ரசிகர்களின் கனவு கண்ணியாக இருந்த நடிகை ஜெனிலியா இது! இதுவரை யாரும் இப்படி ஒரு போஸ் கொடுத்திருக்கமாட்டங்கப்பா!
Janiliya latest photoshoot
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின.
அதனை தொடர்ந்து நடிகை ஜெனிலியா விஜயுடன் சச்சின், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து இன்னும் பிரபலமானார். அதன்பிறகு ஜெயம்ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் படம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ஜெனிலியாவின் குறும்பு தனமான நடிப்பால் அவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவானது. மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட, இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2012ம் வருடம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த ஜெனிலியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விடுத்து குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.ஆனால் இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குட்டையான உடையில் பின்புறம் திரும்பி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சோ க்யூட் என பலவிதமான கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர்.