"திரையுலப் பிரபலங்கள் புறக்கணித்த ஜப்பான்.. என்ன காரணம் தெரியுமா.?
திரையுலப் பிரபலங்கள் புறக்கணித்த ஜப்பான்.. என்ன காரணம் தெரியுமா.?
இந்த தீபாவளிக்கு பல படங்கள் வெளிவந்தாலும், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது கார்த்தியின் ஜப்பானும், கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படமும் தான். ஏக எதிர்பார்ப்புடன் வெளியான இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றன.
இதில் ஜிகர்தண்டா நல்ல நேர்மறையான விமர்சனத்தைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. கார்த்தியின் ஜப்பான் படம் குறித்து சில நடுநிலையான பத்திரிக்கையாளர்கள் "ஜப்பான் ஒரு முறை பார்க்க கூடிய படம் தான்" என்று கூறி வருகின்றனர்.
மேலும் ஜிகர்தண்டா படத்தை இயக்குனர் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், மாரி செல்வராஜ், புஷ்கர் காயத்ரி, பொன்ராம், அறிவழகன், நெல்சன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பார்த்துவிட்டு நல்லவிதமாகப் பாராட்டினர்.
ஆனால் கார்த்தியின் ஜப்பான் படத்தை திரைப் பிரபலங்கள் ஒருவர் கூட விமர்சனம் செய்தோ, பாராட்டவோ இல்லை. ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு படம், பிரபலங்களாலும் புறக்கணிக்கப்படும் என்பதற்கு இதுவே உதாரணம். கார்த்தியின் கேரியரில் இது மிகவும் மோசமான தோல்வி.