ஜெயம் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த நடிகர் என்ன ஆனார்.? அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.?
Jayam movie villain Gopichand acting as villain in rajinis annaaththa movie
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், அவரது தம்பி ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெயம். ரவி என்ற பெயரில் இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவி, இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி என தமிழ் சினிமாவில் புகழ்பெற்றார்.
படத்தில் இவருக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். மேலும், ஜெயம் ரவிக்கு இணையாக, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் கோபிச்சந்த். மிரட்டல் வில்லனாக வந்த இவரின் நடிப்பு படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது. இந்த படத்தின் வெற்றிக்கு இவரது நடிப்பும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில், ஜெயம் படத்திற்கு பிறகு இவர் என்ன ஆனார், எந்த படத்தில் நடித்தார் என எதுவும் தெரியவில்லை. பல்வேறு மொழிப்படங்களில் பிசியாக இருந்த இவர், தற்போது மீண்டும் மிரட்டல் வில்லனாக தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆம், சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக கோபிசந்த் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், விரைவில் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.