ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் அடுத்த அப்டேட்.. படக்குழு அறிவிப்பு.!
ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் அடுத்த அப்டேட்.. படக்குழு அறிவிப்பு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தற்போது இயக்குனர் அகமது இயக்கத்தில் இறைவன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனையடுத்து இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது இறைவன் படத்தில் இடம்பெற்றுள்ள 'இது போல' என தொடங்கும் பாடல் நாளை மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.