விஜயகாந்த் குறித்து பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும் - ஜெயம் ரவி!
விஜயகாந்த் குறித்து பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும் - ஜெயம் ரவி!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தேமுதிக அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார் அவரது மறைவு திரை பிரபலங்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் இழப்பு என்று அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து கேப்டன் விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களும் திரையுலக பிரபலங்கள் பலரும் தினமும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நடிகர் ஜெயம் ரவி, "விஜயகாந்த் குறித்து பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும். நடிகர், அரசியல்வாதி என்பதை எல்லாம் தாண்டி ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் அவர் குறித்த பாடம் இடம்பெற வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.