×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனது அப்பாவின் நிறைவேறாத நீண்டநாள் ஆசை இப்போ நிறைவேறிருச்சு! உச்சகட்ட பெருமிதத்தில் ஜெயம்ரவி!

jayam ravi talk about his father future wish

Advertisement

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் ஜெயம் ரவி. இவர் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் ஜெயம் ரவியை அவரது அண்ணனும் இயக்குனருமான ராஜாவே ஹீரோவாக அறிமுகம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி,  சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தாம் தூம், தாஸ்,  மழை,  சந்தோஷ் சுப்ரமணியம், வனமகன்,  பேராண்மை,  தனி ஒருவன், என ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மேலும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அவரை போலவே அவரது அண்ணனும் இயக்குனராக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் புகழ்பெற்ற சகோதரர்களாக விளங்கும் ரவி மற்றும் ராஜாவின் தந்தை மோகன் ஒரு எடிட்டர் ஆவார்.

 இந்நிலையில் ஜெயம் ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், எனது தந்தை மோகன் நடிகராக அல்லது இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தார்.ஆனால் எடிட்டர் ஆகிவிட்டார். ஆனாலும் எனது அண்ணன் மோகன்ராஜா இயக்குனராகவும், நான்  நடிகராகவும் முன்னேறி எங்களது தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டோம். அதற்காக அவர் மிகவும் பெருமை அடைந்துள்ளார். 

மேலும் எனது தந்தை தனது அனுபவங்களை வைத்து தனிமனிதன் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.அதுமற்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.அதுமட்டுமின்றி எனது அம்மாவும் காந்திகிராமத்தில் படித்தவர். காந்தியின் அனைத்து நல்ல குணங்களும் எனது அம்மாவிடமும் இருக்கும். அவர் நிறைய எங்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளார்.மேலும் எனது அம்மாவும் வேலியற்ற வேதம் என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jayam ravi #editor #mohan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story