ஜீவாவிற்கு ஜோடி இந்த கவர்ச்சி நடிகையா? இவர் யாருனு தெரியுதா? வைரலாகும் புகைப்படம்!!
JEEVA POST SATHISH LADY GETUP PHOTO
தமிழ் சினிமாவில் ஆசைஆசையாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா. அதனை தொடர்ந்து அவர் தித்திக்குதே, ராம் டிஷ்யூம் தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, நண்பன், நீதானே என் பொன்வசந்தம் முகமூடி, போக்கிரி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவருக்கு நீண்ட நாட்களாக படங்கள் எதுவும் வெற்றியை கொடுக்கும் வகையில் அமையவில்லை. இருப்பினும் அவர் வெற்றி படங்களை கொடுப்பதற்காக தீவிரமாக போராடி வருகிறார்.
இந்த ஆண்டு ஜீவா கீ, ஜிப்ஸி, கொரிலா, சீறு, ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கும் 83 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜீவா ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு யார் இந்த ஹீரோயின் என கேள்விஎழுப்பியுள்ளார்.
அந்த ஹீரோயின் காமெடியன் சதீஷ் தான். பெண் வேடமிட்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜீவா வெளியிட்டுள்ளார்.