தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளிநாட்டு நட்சத்திர ஹோட்டலில் நடிகர் ஜீவா செய்த காரியம்! கத்தி, கையும் களவுமாக சிக்கவைத்த அலாரம்!

jeeva smoke in star hotel

jeeva-smoke-in-star-hotel Advertisement

1983 இல் இந்திய அணி இங்கிலாந்து சென்று எவ்வாறு கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது என்ற உண்மை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் படம் 83.இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

இந்நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா மிகவும் பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது இதில் அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்பொழுது ஜீவா தனது படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமாக அனுபவங்கள் குறித்து பல விஷயங்களைப் பேசினார். அப்பொழுது அவர்  எனக்கு இந்த படவாய்ப்பு விஷ்ணு மூலமாக தான் கிடைத்தது. முதலில் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிக்க கூறியபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அதில் நடித்த பிறகு மக்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

83 movie

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்டது அப்பொழுது படப்பிடிப்பின்போது நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தோம். அங்கு ரூமில் சிகரெட் பிடிக்க கூடாது.ஆனால் நாங்க நம்ம ஊரை போல, கேட்டால் சொல்லி கொள்ளலாம் என தம்மடித்துக்கொண்டு இருந்தோம். 3 செகண்ட்தான். உடனே புகை அலாரம் கத்த ஆரம்பித்துவிட்டது.

உடனே ஓட்டலில் உள்ள அனைவரும் ஓடி வந்து, எங்க எல்லாரையம் வெளிய போங்கன்னு சொல்லிட்டாங்க.உடனே நான்தான் ஸ்ரீகாந்த் சார் மாதிரி பயிற்சி எடுத்துட்டு இருந்தேன் என கூறி சமாளிச்சுட்டோம் என கூறியுள்ளார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#83 movie #Jeeva #Smoking
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story