இவர்தான் நடிகை ஜெனிலியாவின் அம்மா! புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்!
jeniliya mom

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்,மேலும் இவர் தனது குறும்பு தனம் மற்றும் கலகலப்பான குணத்தால் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.
கடந்த 2012ம் வருடம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த ஜெனிலியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் தற்போது சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்னையர் தினம் என்பதால் நடிகை ஜெனிலியா தன் அம்மாவின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.