அடேங்கப்பா.. ஜித்தன் ரமேஷா இது! தீயாய் பரவும் வீடியோ! அதிர்ச்சியில் வாயடைத்துப் போன பிக்பாஸ் போட்டியாளர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 சுவாரஸ்யமாக சென்ற நிலையில் ஜனவரி 17 முடிவடைந்தது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதிக வாக்குகளை பெற்று ஆரி வெற்றியாளரானார். மேலும் பாலாஜி இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் ஜித்தன் ரமேஷ். இவர் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஆர்.கே வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்த ஜித்தன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவர் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார். இவர் நடிகர் ஜீவாவின் சகோதரர் ஆவார். அதனைத் தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் 10ற்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.
இந்தநிலையில் ஜித்தன் ரமேஷ்க்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது., அங்கு அவர் மிகவும் அமைதியாகவும், எதையும் கண்டுகொள்ளாமல் இருக்குமிடம் தெரியாமல் இருந்து வந்தார். இதனாலேயே விமர்சனங்களை சந்தித்த அவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது ஜித்தன் ரமேஷ் அசத்தலாக நடனம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட பிக்பாஸ் பிரபலங்கள் ஜித்தன் ரமேஷா இது ?? பிக்பாஸ் வீட்டில் தினமும் காலையில் போடப்படும் வேக் அப் பாடலுக்கு கூட நடனமாடவில்லையே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.