"நம்பிக்கை துரோகம் தான், அவரது சினிமா வாழ்க்கை முடிய காரணம்.." நடிகர் பிரசாந்த் குறித்து செய்யாறு பாலு பேட்டி.!
நம்பிக்கை துரோகம் தான், அவரது சினிமா வாழ்க்கை முடிய காரணம்.. நடிகர் பிரசாந்த் குறித்து செய்யாறு பாலு பேட்டி.!
90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் ஆக வளம் வந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் செம்பருத்தி கல்லூரி வாசல் போன்ற திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். இளம் நடிகராக இருந்தபோது இவரது சினிமா வாழ்க்கையில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
எனினும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இவர் கண்ணெதிரே தோன்றினாள் பார்த்தேன் ரசித்தேன் சாக்லேட் போன்ற திரைப்படங்களின் வெற்றியால் விஜய் அஜித் ஆகியோருக்கு போட்டியான ஹீரோவாக வலம் வந்தார். இந்நிலையில் 2005ஆம் ஆண்டு இவருக்கு கிரகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.