தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் சுஷாந்த் எனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ் இதுதான்! பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட பதிவு!

Journalist tweet sushanth lasr message to her

journalist-tweet-sushanth-lasr-message-to-her Advertisement

பாலிவுட்டில் கை போ சே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பெருமளவில் பிரபலமானார். 

அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வந்த சுஷாந்த் கடந்த வாரம் மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக  கூறப்படுகிறது. இவரது இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

Sushanth

இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் சுஷாந்த் சிங் தனக்கு  கடைசியாக அனுப்பிய மெசேஜை டிவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர், இது எனக்கு சுஷாந்த் அனுப்பிய கடைசி மெசேஜ்."சார் நான் விரும்பிய அனைத்தையும், எனக்கு தேவையானவற்றையும் பெற்று விட்டேன். யாருடைய இருப்பிற்காகவும், மறைவிற்காகவும் எனது மன அமைதி மற்றும் புன்னகையுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. இத்துடன் எல்லாம் நன்றாக மாறப்போகிறது. காலை வணக்கம்" என்று மெசேஜ் அனுப்பினார் என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sushanth #suicide #journalist
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story