அனாதையாக உயிரிழந்த காதல் திரைப்பட நடிகர்.. ரசிகர்கள் வருத்தம்.?
அனாதையாக உயிரிழந்த காதல் திரைப்பட நடிகர்.. ரசிகர்கள் வருத்தம்.?
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது 'காதல்' திரைப்படம். 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரும் ஹிட்டானது. பரத் கதாநாயகனாகவும், சந்தியா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தில் காதல் சுகுமார், பாபு போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
திரையரங்கில் காதல் திரைப்படத்தை பார்த்து அழாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இப்படத்தின் தாக்கம் ரசிகர்களின் மனதில் இன்று அளவிலும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், 'காதல்' திரைப்படத்தில் விருச்சகாந்த் எனும் கேரக்டரில் பாபு என்பவர் நடித்திருந்தார். இவருக்கு இப்படத்திற்கு பின்பு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வருமானத்திற்கு வழியில்லாமல் தெருக்களில் சுற்றித்திரிந்தாராம்.
இதனையடுத்து மதுரையில் தனியாக பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பாபு, ஆட்டோவில் அனாதையாக உயிரிழந்ததாக செய்தி வெளியாகியிருக்கிறது. இச்செய்தி இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.