காதல் திரைப்படத்தில் நடித்த காமெடி நட்சத்திரத்தின் சோகமான நிலைமை.. நலம் விசாரித்த நடிகர் யோகி பாபு.?
காதல் திரைப்படத்தில் நடித்த காமெடி நட்சத்திரத்தின் சோகமான நிலைமை.. நலம் விசாரித்த நடிகர் யோகி பாபு.?
தமிழ் சினிமாவில் சில காட்சிகளில் மட்டும் நடித்து பிரபலமாக இருப்பவர்கள் பலர் உண்டு. அந்த வரிசையில் இன்று வரை மக்கள் மத்தியில் அழியாத இடத்தை பிடித்தவர் காமெடி நடிகர் விமல்.
இவர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான 'காதல்' திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த காட்சியில் போலி இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டு வந்தவர் தான் நடிகர் விமல். நடித்துக் காட்டு என்று இயக்குனர் கூறிய உடன் இவர் செய்யும் ரியாக்ஷனை பார்த்து அங்கே இருப்பவர்கள் சிரிப்பார்கள்.
இதன்படி 'காதல்' திரைப்படம் எந்த அளவு சீரியஸானா படம் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் இந்த முக்கியமான காமெடி காட்சி யாராலும் மறக்க முடியாது. இந்த காமெடி காட்சி நடித்த விமல் இன்று வரை என்ன செய்கிறார் என்று பெரும்பாலானருக்கு தெரிந்துஇருக்காது.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் யூடியூப் சேனலில் பேட்டியளித்த நடிகர் விமல், ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் யோகி பாபு என்னை அடையாளம் கண்டு கொண்டு தனியே அழைத்துச் சென்று பேசினார். அவர் அவ்வாறு என்னை நினைவு வைத்துப் பேசியது எனக்கு பெருமையாக இருந்தது என்று கூறியிருக்கிறார் நடிகர் விமல்.