"உங்க போதைக்கு நாங்க ஊறுகா..." காதல் பட சரண்யா ஆரம்பித்த அட்டகாசமான மியூசிக் ஸ்டூடியோ .!
உங்க போதைக்கு நாங்க ஊறுகா... காதல் பட சரண்யா ஆரம்பித்த அட்டகாசமான மியூசிக் ஸ்டூடியோ .!
நீ வருவாய் என திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சரண்யா. இதனைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பும் கதாபாத்திரமும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேராண்மை மற்றும் மழைக்காலம் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாகவும் வலம் வந்தவர் இவர். தற்போது புஷ்கரா என்ற ஸ்டூடியோ ஒன்றை துவங்கி இருக்கிறார். தனது புதிய தொழில் மற்றும் அதைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் சரண்யா.
நான் ஒரு தொழில் தொடங்குகிறேன் என்று கூறிய போது எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் ஒரு ஜவுளிக்கடை அல்லது ஒரு பொட்டிக் வைத்து தொழில் செய் என்று அறிவுரை கூறினார்கள். நான் சிறுவயதிலிருந்தே சினிமாவில் இருப்பதால் அதைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு தெரியாது எனவே நான் மியூசிக் ஸ்டுடியோவை ஆரம்பித்தேன் என்று கூறி இருக்கிறார்.
மேலும் ஆரம்பித்த முதல் 15 நாட்களுக்கு எந்த ஒரு பெரிய வாய்ப்பு வராததால் மிகவும் பயந்ததாகவும் தற்போது சிறிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார். ஒரு தொழில் ஆரம்பித்தால் பொறுமை அவசியம் என்றும் தன்னுடைய புஷ்கரா மியூசிக் ஸ்டுடியோ விரைவிலேயே மிகப்பெரிய ஒரு ஸ்டூடியோவாக வரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.