சினிமாலதான் காமெடியன், நிஜத்துல பலே வில்லன்.. நடிகையின் பரபரப்பு குற்றசாட்டு.. ஊட்டியில் நடந்தது என்ன?.!
சினிமாலதான் காமெடியன், நிஜத்துல பலே வில்லன்.. நடிகையின் பரபரப்பு குற்றசாட்டு.. ஊட்டியில் நடந்தது என்ன?.!
காதல், விருமாண்டி, காதல் அழிவதில்லை உட்பட பல படங்களை இயக்கிய நடிகர் காதல் சுகுமார். இவர் சமீபத்தில் கவனின் ஸ்டார் படத்தில் நடித்து வரவேற்பு பெற்றிருந்தார். இதனிடையே, இவரின் மீது பெண் ஒருவர் அதிர்ச்சி புகார் அளித்துள்ளார்.
சென்னை வடபழனியில் வசித்து வரும் 36 வயது கணவரை பிரிந்த பெண், குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் சுகுமார் மீது அதிர்ச்சி புகார் அளித்துள்ளார். ஒருசில படங்களில் துணை நடிகையாக நடித்த பெண்ணுக்கும் - சுகுமாருக்கும் இடையே குறும்படத்தில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நாளடைவில் காதலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: குடும்பஸ்தன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ண கட்டிக்கிட்டு பாடல் வெளியீடு; லிங்க் உள்ளே.!
பெண்ணை ஏமாற்றி மோசடி
இருவருக்கும் இடையேயான பழக்கம் பின்னாளில் நெருக்கத்தை ஏற்படுத்த, பெண்ணை நலமா? சாப்பிட்டீங்களா? என ஆசையாக பேசுவதுபோல நடித்து மதில் இடம்பிடித்து இருக்கிறார். நடிகையின் நம்பர் கிடைத்த மறுநாளில் இருந்து நண்பராக பேசி வந்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக பெண்மணி கணவரை பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்து வருகிறார்.
சினிமாவில் வாய்ப்பு கொடுக்கிறேன் என அன்பாக பேசியவர், பின்னாளில் பெண்ணை தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார். காதலாகி கோத்தகிரி, ஊட்டி என அழைத்துச் சென்றவர், எனக்கும் திருமணமாகி விவகாரத்தாகிவிட்ட காரணத்தால், நாம் திருமணம் செய்யலாம் என பேசி இருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளாக பெரம்பூரில் இருந்தவர்கள், பின் வடபழனியில் வீடு எடுத்து தங்கி இருக்கின்றனர்.
பெண்ணுக்கு பட்டை நாமம்
வீடு பணம், வாடகை என அனைத்தையும் பெண்ணிடம் பெற்றுக்கொண்டவர், ஒருகட்டத்தில் தாலிகட்டி திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. எங்கே திரைத்துறை நிகழ்ச்சிக்கு சென்றாலும், நடிகையை மனைவி என கூறி அறிமுகம் செய்து இருக்கிறார். இதனிடையே, லோன் என நடிகையின் கால்களில் விழுந்து கண்ணீர் வடித்து சுகுமார் பணத்தையும் பறித்து இருக்கிறார். நகை, பணம் என அனைத்தையும் இழந்த நடிகை, தற்போது சுகுமார் தன்னை மோசடி செய்துவிட்டதாக புகார் அளிக்கிறார்.
நகை அடமானம், வட்டிக்கு கடன் வாங்கி என மொத்தமாக ரூ.7 இலட்சம் பணத்தை இழந்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் சுகுமார் தலைமறைவாகவே, அவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டு, நடிகையை தனக்கு 35 வயது என சொல்லி ஏமாற்றியது தெரியவந்தது. உண்மையில் சுகுமாருக்கு 50 வயது ஆகிறது. 3 ஆண்டுகளாக நடிகையை ஏமாற்றியவர், அவரை கைவிட்டு சென்றுள்ளார். இந்த விஷயம் குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம்; வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!