அடேங்கப்பா! கைதி படம் தற்போதுவரை எத்தனை கோடி வசூலித்துள்ளது தெரியுமா?
Kaithi movie box office collection details
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது கைதி திரைப்படம். ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
கைதி படத்துடன் இணைந்து தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் திரைப்படம் இதுவரை 260 கோடி வசூல் செய்திருப்பதாகவும், அதேவேளையில் கார்த்தியின் கைதி திரைப்படம் தற்போதுவரை 80 கோடி வசூல் செய்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், கைதி திரைப்படம் விரைவில் 100 கோடியை தாண்டி 100 கோடி க்ளப்பில் இடம் பிடித்துவிடும் எனவும் கூறப்படுகிறது. குறைந்த செலவில் உருவான கைதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.