தளபதியின் அடுத்த படத்தில் 2 ஹீரோயின்கள்..! சுவாரசியத்தை ஏற்படுத்தும் தளபதி 65..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
Kajal agarwal and pooja hegde pair up with vijay in thalapathi 65
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். கொரோனா பயம், ஊரடங்கு உத்தரவு காரணமாக மாஸ்டர் படம் திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என பல கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், முருகதாஸ் இயக்க போவதாகவும், விஜய் - முருகதாஸ் கூட்டணியில் மெகாஹிட் கொடுத்த துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என ஏறக்குறைய முடிவாகியுள்ள நிலையில், இதுகுறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே இந்த படத்தில் மீண்டும் விஜய்யுடன் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும், படத்தில் மற்றொரு ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவின் ‘முகமூடி' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
முகமூடி படத்திற்கு பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காத இவர் தெலுங்கில் செம பிசியாக இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.