நடிகை காஜல் அகர்வால்தானா இது! இப்படி மாறிட்டாரே! வைரலாகும் புகைப்படத்தால் செம ஷாக்கான ரசிகர்கள்!
Kajal agarwal latest photo viral
தமிழ் சினிமாவில் பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து அவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து நடிகை காஜல் கைவசம் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா, ஹிந்தியில் ஹே சினாமிகா போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை காஜல்அகர்வால் தீவிர உடற்பயிற்சி மற்றும் டயட்டால் உடல் எடை குறைந்து செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நடிகை காஜல் அகர்வாலா இது! இப்படி ஒல்லியாகிட்டாரே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.