பிக்பாஸ் வீட்டின் குயின் இவர்தான்.! உற்சாகத்துடன் புகழ்ந்து தள்ளிய முக்கிய பிரபலம்.! யாரை தெரியுமா?
kajal pasupathi wish losliya as queen
பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்சன் , வனிதா, முகென், லாஸ்லியா ஆகிய 8 பிரபலங்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
மேலும் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறிய வனிதா மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்து பிக்பாஸ் வீட்டையே ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் புதிதாக மேலும் யார் வருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
அவர்கள் வீட்டிற்குள் வந்ததுமே பல கலவரங்கள் வெடிக்க துவங்கியது.
இந்நிலையில் பிக்பாஸ் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை தவறாமல் வெளியிட்டு வரும் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் ரசிகை ஒருவர் வனிதா இந்த வீட்டில் இருந்த அத்தனை பெண்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைச்சாச்சு ஆனால் நம்ம லாஸ்லியாவோட விரல் நுனிய கூட ஆட்டம் காண வைக்க முடியவில்லை என கூற அதற்கு அவர் லாஸ்லியா தான் குயின் என பதிலளித்துள்ளார்.