தொகுப்பாளினி கல்யாணியின் மகளா இது? என்னம்மா வளர்ந்துட்டாங்க.. வைரலாகும் கியூட் புகைப்படம்!
kalyani daughter photo viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை கல்யாணி. அதனை கடந்து அவர் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக ஏராளமான பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
பின்னர் அவர் தனது பெயரை பூர்ணிமா என மாற்றிக்கொண்டு தமிழ் சினிமாவில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கிய நடிகை கல்யாணி அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
சினிமா, சீரியல் தொகுப்பாளினி என தூள் கிளப்பி வந்த கல்யாணி ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகை கல்யாணியின் குழந்தையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.