செம தில்லுதான்! ஆகாயத்தில் ஜாலியாக பறக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
Kalyani priyadarshan sky diving in dubai
பிரபல இயக்குனர் பிரியதர்சன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அவர் சிம்பு நடித்துவரும் மாநாடு மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து வான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் பிறப்பிக்கபட்ட நிலையில், நடிகை கல்யாணி துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது நீண்ட நாள் ஆசையான ஸ்கை டைவிங் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் வெளியே சிரிக்கிறேன் உள்ளே அழுகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.