கமல் சார் ட்ரீட் எங்க? பிக்பாஸின் கேள்விக்கு உலகநாயகன் அளித்த எதிர்பாராத பதிலை பார்த்தீர்களா!
பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமலுக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ், ட்ரீட் எங்க? என கேட்டதற்கு அவர் சற்றும் எதிர்பாராத அசத்தலான பதிலளித்துள்ளார்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தொடங்கி வாக்குவாதங்கள், சண்டைகள், உற்சாகங்கள், விழாக்கள் என நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும். பரபரப்பாகவும் 34 நாட்களை கடந்து சென்று கொண்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கமல் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
மேலும் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமலுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு உற்சாகத்துடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பிக்பாஸ் நடிகர் கமலிடம் ட்ரீட் எங்க? எனக்கேட்க, அதற்கு அவர் நான் ஒவ்வொருவரையும் சமமாகவும், மரியாதையுடனும் ட்ரீட் செய்வேன். அதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன். அதுவே எனது ட்ரீட் என யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறியுள்ளார்.