பிகில் விஜயை புகழ்ந்து தள்ளும் மக்கள் நீதி மையம்! குறை சொல்லும் அதிமுக! விஜய் அரசியல் செய்கிறாரா??
kamal appriciate to actoe vijay
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய், "சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுனர்கள் மீது பழி போடுகிறார்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ, அங்கு அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும்.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், இந்தி திணிப்பு குறித்து, தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்கப்படாது என்றார். மேலும், பேனர் விவகாரம் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், விஜய் பேசியது சரியான நேரத்தில் நியாயத்திற்காக குரல் கொடுத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.
இந்தநிலையில் நடிகர் விஜய்யின் பேச்சில் மறைமுகமாக அரசியல் தெரிகிறது என பலரும் கூறிவரும் நிலையில், யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ, அங்கு அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்று விஜய் கூறியதற்கு, அ.தி.மு.க பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வைகைச்செல்வன் நடிகர் விஜய் படத்தை ஓடவைப்பதற்க்காக அப்படி பேசியுள்ளார் எனவும், மக்கள் அதிமுகவை சரியான இடத்தில் வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.