×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்திரத்தில் கமல் ரசிகர்கள்! டுவிட்டரில் ட்ரெண்டாகும் இயக்குனர் வெங்கட் பிரபு! என்ன காரணம்னு பார்த்தீங்களா!!

செம ஆத்திரத்தில் கமல் ரசிகர்கள்! டுவிட்டரில் ட்ரெண்டாகும் இயக்குனர் வெங்கட் பிரபு! என்ன காரணம்னு பார்த்தீங்களா!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான ஹிட் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் வெங்கட் பிரபு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவர் தற்போது சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் வெங்கட்பிரபு நாளை தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு ரசிகர் ஒருவர் தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சகலகலாவல்லவர் வெங்கட் பிரபு. அவர்களுக்கு முன் கூட்டிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

அதற்கு வெங்கட் பிரபு, அவ்ளோ பில்ட் அப் பாத்த உடனே, தப்பா என்ன டேக் பண்ணிட்டீங்க-னு நெனச்சேன். அப்பறம்தான் உள்குத்து புரியுது என பதிலளித்துள்ளார். அதாவது நாளை நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாடவிருக்கிறார். இந்த நிலையில் இத்தகைய பதிவால் ஆத்திரமடைந்த அவரது ரசிகர்கள் #எச்சப்பய_வெங்கட் பிரபு என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் பெருமளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #venkat prabhu #birthday
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story