×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் கமல்ஹாசனுக்கு என்னாச்சு! மருத்துவமனையில் தீவிர அறுவை சிகிச்சை! பதறிப்போன ரசிகர்கள்!

kamal haasan treatment in apollo

Advertisement

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது உலக நாயகனாக ஜொலித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சதிரமாக அறிமுகமாகி அவர் இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது திரைப்பயணம் 60 ஆண்டுகளை எட்டியுள்ளது.மேலும் அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி, அதற்காக தீவிரமாக வேலை பார்த்து வந்தார்.

நடிகர் கமல் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிவந்தார். பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்2 என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் கமல் தற்போது அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு கமலுக்கு விபத்தில் காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு கால்எலும்பு முறிவு ஏற்பட்டு

இந்நிலையில் அவரது எலும்பு வளர்ந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதனால் அந்த  சிறிய இடைவெளி உருவானது. அதனால் அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. கம்பியை அகற்றுவதற்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடந்து தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #operation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story