தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யூடியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இந்தியன் 2 முதலிடம்; 6.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை.!

யூடியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இந்தியன் 2 முதலிடம்; 6.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை.!

Kamal hassan Indian 2 youtube Trending No 1 Advertisement

 

லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிரூத் இசையில், நடிகர்கள் கமல் ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2.

கடந்த 1996ம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன் திரைப்படம் இன்று வரை பாராட்டப்படும் நிலையில், அதனைத்தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகமும் படமாக்கப்பட்டது. பல பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுக்கு நடுவே படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

படம் விரைவில் திரையங்குகளில் வெளியாகி, உலகளவில் மாபெரும் சாதனையை படைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. படத்தின் இன்ட்ரோ காட்சிகள் நேற்று படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. 

Kamal Hassan

அனிருத்தின் இசையில் அசத்தலான காட்சிகள் நிரம்பியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் காட்சிகள் தற்போது வரை யூடியூபில் 6.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

டிரைலர் வெளியான ஒருநாளில் 6.4 மில்லியன் பார்வையாளர்களை உலகளவில் கடந்து மாபெரும் சரித்திர சாதனை படைத்துள்ளது. யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து முதல் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kamal Hassan #tamil cinema #indian 2 #கமல் ஹாசன் #தமிழ் சினிமா #இந்தியன் 2
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story