கமல் பிறந்த நாள் ஸ்பெஷலாக இந்தியன் 2 புகைப்படத்தை வெளியிட்ட சங்கர்! வைரலாகும் புகைப்படம்.
Kamal indian2
ரஜினி நடித்த 2.0 படத்தை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கி வரும் படம் தான் இந்தியன் 2. இந்த நடிகர் கமல் ஷுரோவாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது.
மேலும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சித்தார்த், பிரியா பவானி சங்கர்,ரகுல் பிரீத் சிங், நெடுமுடிவேண்டு, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
மேலும் இந்தியன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இந்தியன் 2 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது நேற்று கமல் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்தியன் 2 புகைப்படத்தை இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ளார்.