சிறுவயதில் உலகநாயகன் கமலுடன் இருக்கும் இந்த பையன் யார்னு தெரியுதா? தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாச்சே.! வைரல் புகைப்படம்!!
சிறுவயதில் உலகநாயகன் கமலுடன் இருக்கும் இந்த பையன் யார்னு தெரியுதா? தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாச்சே.! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திரமாக, உலக நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கென நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் நடன இயக்குனர் மற்றும் அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர். நடிகர் கமல் அண்மையில் தனது 68வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்து கூறியுள்ளனர்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தனி ஒருவன், வேலாயுதம், வேலைக்காரன், காட்பாதர் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் மோகன் ராஜாவும் நடிகர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் சிறுவயதில் நடிகர் கமலுடன் எடுத்த தன் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.